;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலையில் 7 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!! (வீடியோ)

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது . அவர் தற்போது விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் . கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் , கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7 ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு இருதய துடிப்பு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார் . அவருடன் தொடர்புடைய சிலருக்கு கொரோனா இருந்தமை தொடர்பில் விசாரணையில் தெரியவந்தது .

இந்த நிலையில் அவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது .

முதல் இரண்டு தடவைகள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது . அவர் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்படுத்தப்பட்டார் . எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்புகொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*