;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் விகிதம் 64.54 சதவீதமாக உயர்வு..!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. தினசரி பரிசோதனை எண்ணிக்கை தற்போது 6 லட்சத்தை கடந்துள்ளது.

நேற்று மட்டும் 6,42,588 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை மொத்தம் 1,88,32,970 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 16,38,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 35,747 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் விகிதம் 64.54 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் கால அளவு தற்போது 21 நாட்களாக இருப்பதாகவும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*