;
Athirady Tamil News

தேர்தல் துண்டறிக்கை விநியோகிப்பவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை!!

0

வவுனியா நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த தேர்தல் துண்டறிக்கை விநியோகிப்பவர்களுக்கு எதிராக பொலிசார்நடவடிக்கை!

வவுனியா நகர்ப்பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்து ண்டுப்பிரசுரங்களை வியாபார நிலையங்களுக்கு விநியோகிப்பவர்களிற்கு எதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரங்களை வியாபார நிலையங்களிற்கு விநியோகிப்பவர்கள் மீது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

சில சந்தர்பங்களில் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களிற்பு கொரோனா நோய் இனம் காணப்பட்டால் அவர்கள் சென்ற வர்த்தக நிலையங்கள் என நகரை முழுமையாக முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதை கவனத்திற்கொண்டே இச்செயற்பாட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் அவ்வாறு ஈடுபடுபவர்களை பொலிஸ் நிலையத்திற்கு.அழைத்துச்சென்று அவர்களுக்கு அறிவுரைகளையும் கூறிவருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − sixteen =

*