;
Athirady Tamil News

சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி!!

0

சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளர் உ.துஷ்யந்தன் அவர்களின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்,

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இறைவனின் தூதரான இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஹஜ் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுவது உண்டு.

தம்மிடமுள்ள, தமக்குப் பிடித்தமான அனைத்தையும் படைத்த இறைவனின் நற்கருணையை மட்டும் எதிர்பார்த்து, ஏழை, எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தியாக மனப்பான்மையை ஊக்குவித்து, அதனைக் கொண்டாடும் வகையில் ஹஜ் பெருநாள் அமைந்துள்ளது.

ஹஜ் பெருநாளின் போது இஸ்லாமியர்கள் அளிக்கும் குர்பானி நன்கொடையும் ஏழை மக்களின் மகிழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடைகளில் ஒன்றாகும்.

இஸ்லாமியர்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது.

மன்னார் மாவட்ட இஸ்லாமியர்களுக்கும் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வோதய ஊடகப்பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + fourteen =

*