;
Athirady Tamil News

கேரளாவில் மேலும் 1129 பேருக்கு கொரோனா -25 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு..!!

0

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இன்று மேலும் 1129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1129 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24,742 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கேரளத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 862 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*