;
Athirady Tamil News

வீதி விபத்துக்களில் இருவர் பலி!!

0

அரலகங்வில கீழ் எல்லேவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த கால்வாயில் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மெதிரிகிரிய பகுதியில் சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி ஒன்று குடை சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மெதிரிகிரய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*