;
Athirady Tamil News

கதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி!!

0

கதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் இறுக்கமான சுகாதார நடமுறைகளுடன் அனுமதிக்கபட்டுள்ளனர்.

வருடந்தோறும் இடம் ஆடிவேல்விழா உற்சவத்தின் இறுதி மகாபெரஹரா ஊர்வலம் இன்று( 3) திங்கட்கிழமை பெருந்திரளான மக்களுடன் நடைபெற்றது.

கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் நடும் வைபவம் ஜீலை 06 சனிக்கிழமை காலை ஆலயத்தில் இடம்பெற்றது.

கன்னிக்கால் நடப்பட்டு 45 தினங்களின் பின்னர் கொடியேற்றம் நடைபெற்று 15 தினங்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவதும் பாரம்பரிய வழக்கமான நடைமுறைகளாகும். எனினும் சமகால கொரோனா தொற்றுச் சூழலில் ஆலய ஆடிவேல்விழா உற்சவம் எவ்வாறான நடைமுறைகளில் நடத்தப்படுமென்பது தொடர்பான இழுபறியில் பக்தர்கள் வருகை மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் இன்றை தினம் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் சுகாதார நெறிமுறைகளுடன் பெருந்திரளான மக்களை அனுமதிக்குமாறு உத்தரவுபிறப்பித்தமையால் இன்றைய கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + eleven =

*