;
Athirady Tamil News

இராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி!!

0

தேர்தல் கடமையின் போது பொலிஸாருக்கு உதவியாக இராணுவம் தயார் நிலையில் இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு அதிகாரி தெரிவித்தார்.

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2020 தொடர்பில் அனைத்து செயற்பாடும் பூர்த்தியாகிய நிலையில் வாக்களிப்பு தொடக்கம் பெறுபேறுகள் வெளியாகும் வரையிலான நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் குறித்து கட்சிகளின் தலைமைகளுக்கிடையேயான தெளிவுபடுத்தலும் ஊடக சந்திப்பும் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் நேற்று (03.08.2020) மாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இத் தெளிவுபடுத்தல் நிகழ்வின் போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள தேர்தல் கால இராணுவ பிரசன்னம் குறித்து வேட்பாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்வியின் போது பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் கடமைகளில் இராணுவத்தினரை அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபடுவார்கள். இராணுவத்தின் தேவை குறித்து தேர்தல் ஆணைக்குழு ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் . இதுவரை அவ்வாறு கோரவில்லை ஆனால் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத சூழல் இடம்பெற்றால் அவர்களுக்காக உதவ இராணுவம் தயார் நிலையில் இருப்பார்கள். அது தவிர கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். மேலும் தீவக வாக்குப்பெட்டிகளை எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவருவதற்கான ஹெலிகொப்டர் வசதி கடற்படை அனுமதி போன்றன பெறப்பட்டு ஒழுங்கு படுத்தியுள்ளோம்.எனத் தெரிவித்தார்.

சட்டங்கள் ஒழுங்குகள் குறித்து தேர்தல் ஒழுங்குகள் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கான பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறையுடனான தேர்தல் வாக்களிப்பு காணொளியும் திரையிடப்பட்டது. இக் கலந்துரையாடலில் அரச அதிபர் தலைமையில் உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 2 =

*