;
Athirady Tamil News

ஆணுறுப்பை நசுக்கிய மாமனார்.. என்ன நடந்தது.. தர்மபுரியை உலுக்கிய சம்பவம்.. 6 பேர் சிக்கினர்!

0

மாப்பிள்ளையின் ஆணுறுப்பை நசுக்கி, அடித்து கொன்று ரோட்டோரம் வீசியம் உள்ளது தொடர்பாக, மாமனாரிடம் தருமபுரி போலீசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.. மேலும் இது சம்பந்தமாக 6 பேரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறரு. தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஓட்டர்திண்ணைஎன்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜி.. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார்.. அவரும் இவரை விரும்பினார்.. ஆனால் விஷயம் ராஜேஸ்வரி வீட்டுக்கு தெரிந்து கொந்தளித்து விட்டனர்.

இதனால், கடுமையான எதிர்ப்பையும் மீறி, 6 மாசத்துக்கு முன்பு ராஜேஸ்வரியை விஜி கல்யாணம் செய்து கொண்டார்.. பெங்களூருவில் ஒரு காய்கறி கடையை ஆரம்பித்து நடத்தினர்.. அதற்குள் லாக்டவுன் போட்டுவிடவும், அந்த கடையும் மூடப்பட்டது. அதனால் வருமானத்துக்கு வழியில்லாமல் தம்பதி தவித்தனர். இந்த நிலையில் 4 நாளைக்கு முன்பு ராஜேஸ்வரியின் தந்தை விஜிக்கு போன் செய்து, காய்கறி வியாபாரம் எதுவும் வேணாம், ஊருக்கு வந்து தன்னுடன் மாங்காய் மண்டியை கவனித்து கொள்ளுமாறும், அது சம்பந்தமாக பேசுவதற்காக கிளம்பி வரும்படியும் சொல்லி உள்ளார். அதனால், மாமனாரை பார்த்து பேச, 3 நாளைக்கு முன்பு விஜி ஊருக்கு வந்துள்ளார்..

ஆனால் அதற்கு பிறகு விஜி பெங்களூர் வந்து சேரவில்லை.. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில்தான், கும்மனூர் அருகே ரோட்டோரம் விஜியின் சடலம் கிடந்ததை பஞ்சப்பள்ளி போலீசார் மீட்டனர்… அரை நிர்வாண நிலையில் அந்த சடலம் கிடந்தது.. அவரது கழுத்து உட்பட பல பகுதிகளில் காயங்கள் இருந்தன.. மர்ம உறுப்பு மிக மோசமாக நசுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கைபற்றிய போலீசார் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையை ஆரம்பிப்பதற்குள் விஜியின் மாமனார் எஸ்கேப் ஆகியிருந்தார். அவர் பெயர் முனிராஜ்.

பிறகு பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.. அப்போது, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1ம் தேதி மாங்காய் மண்டிக்கு கிளம்பி வருமாறு முனிராஜ் சொன்னாராம்.. அதன்பேரில்தான் விஜியும் கிளம்பி வந்துள்ளார்.. அப்போது, மாமனார்தான் விஜியின் தலையில் இருப்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளது தெரியவந்தது.

மேலும் விபத்து போல இருக்க வேண்டும் என்பதற்காக பிணத்தை ஒரு வேனில் ஏற்றி உள்ளனர்.. அந்த பிணத்தின்மேல் தக்காளி பெட்டிகளை அடுக்கி எடுத்து சென்று பிறகு ரோட்டோரத்தில் சடலத்தை வீசி விட்டு போனாராம். இதற்கு அவரது உறவினர்கள் வீரமணி, சித்துராஜ், மஹாலிங்கம் உள்ளிட்ட 4 பேர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். விஜி ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராம். இந்த கல்யாணம் நடந்தது பிடிக்காததால்தான் மருமகனை, மாமனாரே கொன்றுள்ளது தெரியவந்ததுள்ளது..

சடலம் கிடந்த பகுதியில், பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்துதான் இந்த விசாரணையே ஆரம்பமானது.. இப்போது மாமனார் முனிராஜ் உட்பட 6 பேர் கைதாகி உள்ளனர்.. ஆனால், சடலத்தில் ஆணுறுப்பு மிக மோசமாக சிதைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது.. இது சம்பந்தமான விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + five =

*