;
Athirady Tamil News

பெய்ரூட் வெடிவிபத்து: லெபனானில் உள்ள இந்தியர்களுக்காக அவரச உதவிமையம் அமைத்த இந்தியதூதரகம்..!!

0

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர விபத்து பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகருக்கு அருகில் உள்ள தீவுகளிலு உணரப்பட்டது.

இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்தது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் என தீ பற்றி எரிந்தது. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரமே அதிர்ந்து புகைமூட்டமாக காணப்படுகிறது.

இந்த கோரவெடிவிபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு இந்த விபத்து தொடர்பாகவும், இந்தியாவில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவும் தேவையான உதவிகளை செய்யவும் தூதரகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தூதரக உதவிமைய எண்கள்

இந்தியர்களுக்கு அவசர உதவி மையத்தையும் லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அமைத்துள்ளது. மேலும், லெபனானில் உள்ள இந்தியர்கள் அமைதியாக இருக்கும்படியும், இந்தியர்கள் யாருக்கேனும் வெடிவிபத்து தொடர்பாக உதவி தேவைப்படும்பட்சத்தில் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர உதவிமையம் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − four =

*