;
Athirady Tamil News

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

0

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.

இதன்படி இன்று காலை 10.00 மணிவரை கொழும்பில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், மாத்தளையில் 25 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் கேகாலையில் 23 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 23 சதவீத வாக்குகளும், குருணாகலையில் 25 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை திகாமடுல்லையில் 30 சதவீத வாக்குகளும் ஹம்பாந்தோட்டையில் 24 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 30 சதவீத வாக்குகளும், களுத்துறையில் 20 சதவீத வாக்குகளும், கண்டியில் 25 சதவீத வாக்குகளும் மற்றும் நுவரெலியாவில் 25 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் 20 சதவீத வாக்குகளும், மாத்தறையில் 25 சதவீத வாக்குகளும், பதுளையில் 25 சதவீத வாக்குகளும், புத்தளத்தில் 15 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பில் 17 சதவீத வாக்குகளும், காலியில் 20 சதவீத வாக்குகளும் மற்றும் கம்பஹாவில் 18 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் அநுராதபுரத்தில் 30 சதவீத வாக்குகளும், பொலன்னறுவையில் 21 சதவீத வாக்குகளும், மொனராகலையில் 20 சதவீத வாக்குகளும் மற்றும் வன்னியில் 18 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*