;
Athirady Tamil News

வன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு !!

0

வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 77.48 வீத பதிவாகியுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்துள்ளனர்.

பிரதம தலைமைதாங்கும் அதிகாரிகளிற்கு சகலவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.

எனவே பெற்றுக்கொள்ளப்படும் வாக்குப்பெட்டிகள் சீல்செய்யப்பட்ட பின்னர் நாளை காலை 7 மணியளவில் வாக்கு எண்ணுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டசெயலகம் மற்றும்,
தபால் வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள காமினி மகாவித்தியாலயம் ஆகிய பகுதிகள் கடுமையான பாதுகாப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்!!

நுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு!! (படங்கள்)

புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ!!

யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (வீடியோ, படங்கள்)

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (படங்கள்)

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் குழப்ப நிலை!! (வீடியோ)

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 10 =

*