;
Athirady Tamil News

யாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் புனரமைப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். புன்னாலைக்கட்டுவன், ஈவினை, வசாவிளான், குரும்பசிட்டி, குப்பிழான், ஏழாலை, கட்டுவன், சூராவத்தை, சுன்னாகம் சிவன் கோவிலிலிருந்து கொத்தியாவத்தை இந்து மயானம் வரை, சுன்னாகம் மலப்பை, சுன்னாகம் ஸ்ரீலங்கா ரெலிக் கொம், மல்லாகம் சந்தியிலிருந்து அளவெட்டி வரை, மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, அளவெட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், Elephant Metal Aluminium தொழிற்சாலை, சேந்தாங்குளம், இளவாலை, மெய்கண்டான் தொழிற்சாலை, அச்செழு, மாசிவன் பிறைவேற் லிமிற்ரெட், திண்ணை பண்ணை, தாளையடி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், முள்ளியான், முள்ளியான் இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம், தாளையடி ஐஸ் தொழிற்சாலை, வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 14 =

*