;
Athirady Tamil News

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்!!

0

பொய் சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் எம்பிலிபிட்டி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (07) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக போலியான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*