;
Athirady Tamil News

லொறி மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

0

பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனுகம பூகொடை வீதியின் நெல்லிகஹமுல சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் 52 வயதுடைய பனாவல, லுனுகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பூகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 4 =

*