;
Athirady Tamil News

பெண்கள் ஏன் வெற்றிபெற முடியவில்லை? போராட்டத்தை நடத்திவரும் பெண்மணி கேள்வி.!! (படங்கள்)

0

பெண்கள் ஏன் வெற்றிபெற முடியவில்லை?
போராட்டத்தை நடத்திவரும் பெண்மணி கேள்வி.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் சதி இடம்பெற்றுள்ளது எமக்கு சரியான தீர்வு வேண்டும் பெண்கள் ஏன் எந்த மாவட்டத்திலும் வெற்றி பெறவில்லை என தென்மராட்சி மக்கள் சார்பில் பெண்மணியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும் கதிரைக்கு ஆசைப்பட்டால் சுமந்திரன் தேசியப்பட்டியலில் தெரிவாகட்டும் என்ற நிலையில் இன்று (08.08.2020) காலை 10மணி தொடக்கம் சாவகச்சேரியில் ரவிராஜ் முன்றலில் பொது மக்களால் அமைதி
ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வரும் நிலையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
திருமதி சசிகலாவுக்கு அநீதி இடம்பெற்றுள்ளது. கெளரவமாக வீட்டில் இருந்த அவரை தெருவில் விட்டு உள்ளனர். அவரது இடத்தை அவருக்கு கொடுத்து விட்டு சுமந்திரன் ஆசைப்பட்டால் தேசியப்பட்டியலில் தெரிவாகட்டும். மக்கள் ஆணை பெற்ற சசிகலாவை எப்படி பின்தள்ள முடியும்.
சுமந்திரனுக்கு கொடுத்த இராணுவ பாதுகாப்பு இனி சசிகலாவுக்கு தான் கொடுக்க வேண்டும் எமது தொகுதிக்கு சயந்தன் பொறுப்பானவர்.அவரை அழைத்தும் எதுவித பதிலும் அவர் தரவில்லை இந்த இடத்திற்கும் வரவுமில்லை. சசிகலாவுக்கு தீர்வு கிடைக்க விரும்புபவர்கள் பெண்கள் அமைப்புக்கள் எம்முடன் இணையுங்கள்.தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் “”என்றார்

இது குறித்து அறிக்யொன்றினையும் தேர்தல் ஆணையகம் மற்றும் கட்சித் தலைமைகளிடம் கையளிக்க உள்ளனர்.இப் போராட்டத்தில் தமிழர்விடுதலைக் கூட்டணியும் பங்குகொண்டனர். சசிகலா ரவிராஜ் பங்கு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேசியப் பட்டியல் ஆசனத்தை சசிகலாவிற்கு வழங்க முன்வரவேண்டும் – கலாநிதி சி.ரகுராம்!!

பவதாரணி ஊடக சந்திப்பு!! (வீடியோ)

எம்.ஏ.சுமந்திரன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் இ. ரவிராஜின் உருவ சிலை!! (வீடியோ, படங்கள்)

யாழ் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் சிறப்பு அதிரப்படையினர் அடிதடி!! (வீடியோ, படங்கள்)

யாழில் மாவட்ட செயலகம் முன்பாக சற்றுமுன்னர் பதற்றம்! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + four =

*