;
Athirady Tamil News

கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கூட்டமைப்பினரே காரணம் – டக்ளஸ்!!! (படங்கள்)

0

வன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பேன் என்று முன்னாள்அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று வியயம் செய்த அவர் தனியார்விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

வன்னியில் ஒன்றிற்கும் மேற்பட்டஆசனங்கள் கிடைக்கவேண்டும் என்று எதிர்பாத்திருந்தேன்.எனினும் கிடைத்த ஒரு ஆசனத்தின்மூலம் வன்னிமக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பேன்.நான் எந்தஅமைச்சையும் எதிர்பார்க்கவில்லை.எனினும் பிரதமரின் பதவிஏற்பு நிகழ்விற்கு என்னையும் அழைத்திருக்கின்றனர்.
அந்த நிகழ்விற்கு வன்னியில் வெற்றிபெற்றவரையும் அழைத்துச்செல்கின்றேன்.

அத்துடன் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு அவர்கள்தான் காரணம்.அவர்கள் மேல் மக்களிற்கு நம்பிக்கைஇல்லாதநிலையில் நம்பிக்கைக்குரியவர்களை மக்கள் தெரிவுசெய்துள்ளார்கள்.என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*