;
Athirady Tamil News

அமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!!!

0

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை நெருங்குகிறது.

ஒரே நாளில் 525 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.65 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26.50 இலட்சத்தை நெருங்குகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 4 =

*