;
Athirady Tamil News

380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது!!

0

பொரளை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட டி 20 தோட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11) காலை 11.30 மணியளவில் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹெரோயின் பாக்கெட்டுகளினுள் 15 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதுடைய பேஸ்லைன் மாவத்தை, பொரளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் நாளை (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 19 =

*