;
Athirady Tamil News

அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.!! (படங்கள்)

0

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சிவன் ஆலயத்தில் இம் மாதம் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது .

சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஏற்பாடுகள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் அதற்கான ஆயத்த முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்புக்களும் உரிய தரப்புக்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

பாதுகாப்புஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள், மின்சாரம் வழங்கும் முறைகள் சுகாதார நடைமுறைகள், போன்றவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன .

வவுனியா ஆகிலாண்டேஸ்வரி,சமேத ஆகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 12 வருடங்களுக்கு பின்னர் மஹா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாச்சார அலுவலகர், உதவி பிரதேச செயலாளர், மின்சார சபை அதிகாரி, போக்குவரத்துப்பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆலய நிர்வாக தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + eleven =

*