;
Athirady Tamil News

ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பவித்தரா வன்னியாராச்சி அமைச்சு கடமைகளை பொறுப்பேற்றனர்!!

0

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சு அலுவலகத்தில் நேற்று (13) தனது கடமைகளைப் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பிரதான வளமான ஆளணி வளத்தை உயர்ந்தபட்ச அளவில் மேம்படுத்துவதன் மூலமே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.

இது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, வாழ்வாதார வழிகாட்டல் என்பனவற்றிற்கு இடையே தொடர்புகளை பேணுவது அவசியமாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சில் நேற்று (13) தனது கடமைகளைப் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வழிகாட்டல், தலைமைத்துவம் என்பனவற்றின் கீழ், கொரோனா சவால்களுக்கு முகங்கொடுத்ததைப் போன்று ஏனைய சுகாதார நெருக்கடிகளும் வெற்றி கொள்ளப்படும் என்று இதன் போது கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சமான இலக்கு என்ற கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்தும் உறுதிமொழியை யதார்த்தமானதாக மாற்ற உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*