;
Athirady Tamil News

நாளை 9 மணி நேர நீர்வெட்டு !!

0

நாளை (15) இரவு 8 மணி தொடக்கம் கொழும்பின் சில பகுதிகளுக்கு 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேபோல் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*