;
Athirady Tamil News

சிறையில் போதை பொருள் வர்த்தகர் – சகோதரி கல்கிஸ்ஸையில் கைது !!

0

தற்போது சிறையில் உள்ள போதை பொருள் வர்த்தகர் ஒருவரின் சகோதரியை பொலிஸார் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த போதை பொருள் வர்த்தகரின் விற்பனை நடவடிக்கைகளின் ஊடாக பெறப்பட்ட பணம் குறித்த பெண்ணின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த 3 வருடங்களில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் 310 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + six =

*