;
Athirady Tamil News

சுமந்திரனின் அதிரடிப்படைக்கு எதிராக, யாழ் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு! (படங்கள் & வீடியோ)

0

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கும் (special task force) எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர் புங்குடுதீவு கருணாகரன் நாவலன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி) , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி உறுப்பினர் தனுபன் (தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்) ஆகியோர் யாழ் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .

“கடந்த 6 – 08- 2020 அன்று யாழ் மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக (counting agent) நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்ததாகவும், மிகவும் குறைந்தளவிலான யாழ் தேர்தல் மாவட்ட வாக்குகளை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்காமல் வேண்டுமென்று மிக நீண்டநேரத்திற்கு இழுத்தடிப்பு செய்தமைக்காக தாங்கள் அமைதியான முறையில் அங்கு ஒன்றுகூடி எதிர்ப்பினை தெரியப்படுத்தியிருந்ததாகவும்”

“அங்கு திடீரென்று வந்த சுமந்திரனும் அவரது பாதுகாவலர்களும் தங்களையும், கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனையும் இன்னும் பலரையும் தாக்கியதாகவும் அந்த பகுதி யாழ். மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவரது முடிவினை பெற்றுக் கொள்ளாது சுமந்திரனின் பாதுகாவலர்கள் இந்த ஜனநாயக விரோத செயலை தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளதாகவும்” குறிப்பிட்டு மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Gepostet von Santhulaki Eelapriyan am Donnerstag, 6. August 2020

Gepostet von Santhulaki Eelapriyan am Donnerstag, 6. August 2020

வாக்கு எ்ணிக்கை மோசடி2ம்,4ம்,3ம், 7ம்,ஐயோ.ஐயோ..தமிழனுக்கு 1234எண்ண தெரியாது!!சுமந்திரனே ஓட்டுவந்துஓட்டு எண்ணி காட்டிவிட்டு stf பாதுகாப்போடு வூட்டுக்கு போயிட்டாரப்பா.நம்ம லோக்கையாமத்தையா..

Gepostet von Kumar Thillainathan am Donnerstag, 6. August 2020

Gepostet von Darshini Rajh am Donnerstag, 6. August 2020

https://www.facebook.com/watch/live/?v=578558112814920&ref=watch_permalink&t=347

Gepostet von Darshini Rajh am Donnerstag, 6. August 2020

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − three =

*