;
Athirady Tamil News

பாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு!! (படங்கள்)

0

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான குலசிங்கம் திலீபனுக்கான வரவேற்பு நிகழ்வு ஒன்று வவுனியா, தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது.

வவுனியாமாவட்ட அச்சக நண்பர்கள் மற்றும் வர்த்தக நண்பர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து புகையிரதநிலைய வீதி வழியாக தனியார் விருந்தினர் விடுதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார்.

நிகழ்வில் வவுனியா அச்சகநிறுவனங்களின் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை அணிவித்து, வரவேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*