;
Athirady Tamil News

வீட்டில் இருந்த துப்பாக்கி ரவைகளை ஒப்படைத்தவர் கைது !!

0

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை தாமரைக்கேணிப் பகுதியில் தனது வீட்டுக்காணியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை அருகில் இருந்த படையினரிடம் ஒப்படைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் தனது வீட்டுக் காணியை துப்பரவு செய்யும்போது கண்ணாடி போத்தல் ஒன்றிற்குள் ஒயில் ஊற்றப்பட்டு அதற்குள் 22 துப்பாக்கி ரவைகள் போடப்பட்ட நிலையில் இருந்த போத்தல் ஒன்றை கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த ரவைகளை அருகில் இருந்த படையினரிடம் ஒப்படைத்துள்ளார். படையினர் இதனை முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தப் பின்னர், துப்பாக்கி ரவைகளை கண்டெடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 1 =

*