;
Athirady Tamil News

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளர் கைது!!

0

வடபிராந்திய போக்குவரத்து சபையின் முகாமையாளர் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழவினரின் அதிரடி செயற்பாட்டால் 65000 ரூபா பணம் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்றூ காலை மன்னார் பிரதேசத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையினுல் ஏற்பட்ட முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 65000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாகவும் இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அறிய முடிகிறது.

கடந்த காலங்களில் இவரது நடவடிக்கை பக்கசார்பாகவும் இனரீதியாகவும் இருந்தது என்று பல ஊழியர்கள் அதிருப்பதியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − four =

*