;
Athirady Tamil News

சிறிதரன் மற்றும் டக்ளஸ் பாராளுமன்றில் ஆற்றிய உரை!! (வீடியோ)

0

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை அமர்வு இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதங்களின் போது, ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமான நேர ஒதுக்கீடு தொடர்பில் எதிர்க்கட்சி இன்று சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில், எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தின் போது, எதிர்க் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை 60 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்

இதேவேளை, ஜனாதிபதி நேற்று ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து வௌியிடாமை கவலை அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 7 =

*