;
Athirady Tamil News

நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PCR )பரிசோதனை!! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா வைரஸ் சமூக மட்டத்தில் பரம்பலடைவதை தடுப்பதற்காக பரிசோதனைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் இன்று(21) கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் வழிகாட்டல்களுக்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PCR )பரிசோதனை மாதிரிகள் செயலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சுகாதார ஊழியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − four =

*