;
Athirady Tamil News

யாழ் கல்வியங்காடு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் சதுர்த்தி!! (வீடியோ)

0

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

விநாயக விரதங்கள் முதன்மை விரதமாக கருதப்படுகின்ற ஆவணி சதுர்த்தி தினமான இன்று சந்திரசேகரப் பிள்ளையாருக்கு 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயக பெருமானுக்கு இலட்சார்ச்சனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவிலான விநாயக அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 18 =

*