;
Athirady Tamil News

உத்தியோர்கபூர்வ இல்லங்களை பெற்றுக் கொள்வதற்கு 70 அமைச்சர்கள் கோரிக்கை!!

0

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 70 பேர் அரச உத்தியோர்கபூர்வ இல்லங்களை பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் வசம் அரச உத்தியோகப்பூர்வ இல்லங்கள் 35 மாத்திரமே உள்ளது. ஆகையால் இவ்விடயம் தொடர்பில் மாறுப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகப்பூர்வ இல்லங்களை பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்களாக 70 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இருப்பினும் அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சிமன்ற சபைகள் அமைச்சிடம் 35 அரச உத்தியோகப்பூர்வ இல்லங்களே தற்போதைய நிலையில் உள்ளன.

உத்தியோகப்பூர்வ இல்லங்களை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கோரிக்கை அத்தியாசிய தேவை மற்றும் அவர்கள் வாழும் பிரதேசத்திற்கும் தலைநகருக்கும் இடையிலான தூரம் மற்றும் பொதுகாரணிகளை அடிப்படையாகக் கொண்டு பரிசீலனை செய்யப்படும்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் வசித்த அரச உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அரச சேவைகள் அமைச்சுக்கு முழுமையாக கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் அனுபவித்த பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குடியிறுப்பு ஆகியவை மீள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 7 =

*