;
Athirady Tamil News

தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் நிர்வாகத் தெரிவு கூட்டம்!! (படங்கள்)

0

தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் நிர்வாக தெரிவுக்குழு கூட்டம் அமைப்பின் தலைவர் வி.விநோதரன் (ஈழம்) தலைமையில் வவுனியாவில் நேற்று (29) நடைபெற்றது.
வவுனியா கரப்பன் காட்டில் அமைந்துள்ள தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாக குழு தெரிவுக் கூட்டத்தில் 20 முன்னாள் போராளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் நிலம் மக்கள் அமைப்பானது கடந்த ஐந்து வருடங்களாக மனிதாபிமான மற்றும் சமூகப் பணிகளை புலம்பெயர் நிதி உதவியுடன் முன்னெடுத்து வருகின்றது.
வடக்கில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மற்றும் பல்கலை மாணவர்கள், பொது மக்கள், முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான மனிதாபிமான பணிகளை தமிழ் நிலம் மக்கள் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் அமைப்பின் நிர்வாகக் குழு தெரிவில் தலைவராக வி.வினோகரன், செயலாளர் பி.செல்வக்குமார், பொருளாளர் உதயச்சந்திரன் பிரேமலதா, உப தலைவர் விஜியகுமார் வசந்தகுமாரி, உப செயலாளர் உரித்திரன் ராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்கள் நிலம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீ-சேட்டுக்கள் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*