;
Athirady Tamil News

ஈபிடிபி மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும் அவர்களின் கை ஓங்கியுள்ளது: ஈழ புரட்சி அமைப்பு!!

0

ஈபிடிபி மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும் அபிவிருத்தி என்ற ரீதியில் தற்போது அவர்களின் கை ஓங்கியுள்ளது: ஈழ புரட்சி அமைப்பு

ஈபிடிபி மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும் அபிவிருத்தி என்ற ரீதியில் தற்போது அவர்களின் கை ஓங்கியுள்ளது. அதனால் அவர்களுடன் இணைந்து வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என ஈழ புரட்சி அமைப்பின் உப தலைவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான இ.சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஈழ புரட்சி அமைப்பானது ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் கைகோர்த்து ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வன்னியில் பெற்றுக் கொடுப்பதற்கு எமது பங்களிப்பையும் வழங்கியிருந்தோம். அதேபோல் வரவிருக்கும் மாகாண சபை தேரர்தலில் ஈழ புரட்சி அமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து போட்டியிடும். இது சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் எமது தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆசன பங்கீடுகள் தொடர்பிலும், தேர்தலை எதிர் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடுவோம்.

வடமாகாணசபையைப் பொறுத்தவரை அபிவிருத்தி சம்மந்தமான வேலைகளையே செய்ய முடியும். மத்திய அரசாங்கத்தில் அமைச்சராகவும், பாராளுமன்ற பிரதிநித்துவத்தை கொண்டுள்ளதுமான ஒரு கட்சியுடனேயே கைகோர்த்து போட்டியிடவுள்ளோம். வன்னியிலும் இளைஞர்களை ஒன்று திரட்டவுள்ளோம். அதன் முதல் கட்டமாக வவுனியாவில் பல இளைஞர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள்.

ஈழவர் ஜனநாயக முன்னனியின் ஸ்தாபக தலைவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். கருத்து முரண்பாடுகள் காரணமாகவே அவர் பிரிந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஆரம்பித்தார். ஈபிடிபி மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும் அபிவிருத்தி என்ற ரீதியில் தற்போது அவர்களின் கை ஓங்கியுள்ளது. அதனால் அவர்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள அரசங்கத்திற்கு எதிர்ப்பை காட்டி எதனையும் செய்ய முடியொது. பேரம் பேசி தான் எதனையும் செய்ய முடியும். அதன் காரணமாகவே அரசாங்கத்தில் இருக்கும் கட்சியுடன் இணைந்து பயணிக்கவுள்ளோம் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*