;
Athirady Tamil News

இந்த வாக்கெடுப்பு எவ் ஒப்பந்த்தினை பற்றி குறிப்பிடுகின்றது? (படங்கள்)

0

இந்த வாக்கெடுப்பு எவ் ஒப்பந்த்தினை பற்றி குறிப்பிடுகின்றது?
சுவிற்சர்லாந்திற்குள் வந்து வேலை செய்ய விரும்பும் ஐரோப்பிய வாழ் மக்களை ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களிற்கு இணங்காது தாமே கட்டுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU-/EFTA) மக்களின் சுயாதீன விருப்பிற்கிணங்க சுவிற்சர்லாந்து மக்களும் ஐரோப்பிய நாட்டவர்களும் விரும்பிய ஐரோப்பிய நாட்டிலும் சுவிற்சர்லாந்திலும் வசிப்பதற்கும் தொழில் செய்வதற்கானதுமான ஓர் ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்ட்டிருந்தது.

சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி (SVP) இவ் உடன்படிக்கையினை இரத்து செய்து சவிற்சர்லாந்ததில் குடியேற விரும்பும் ஐரோப்பியரை சுவிற்சர்லாந்து சமஷ்டி அரசே கட்டுப்படுத்த வேண்டும் என கடும்போக்குடன் செயற்படுகின்றது. ஏற்கனவே ஐரோப்பாவுடன் செய்யப்ட்ட உடன்படிக்கையானது ஏழு வேறுபட்ட இருதரப்பு உடன் படிக்கைகளின் கோர்வையாகும். இவ் உடன்படிக்கை கோர்வைக்குள் ஐரோப்பிய நாடுகளிற்கிடையான வணிகம் வாண்வெளி ஆராய்ச்சி போன்ற பல விடயங்கள் இருதரப்பினரும் பாரபட்சமின்றி செயற்படுவதற்கான சட்டங்கள் உள்ளடங்குகின்றன.

இவ்வுடன்படிக்கையை சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி (SVP) கூறுவது போல் இரத்துசெய்தால் இதனுடன் உள்ளடங்கும் ஏனைய ஒப்பந்தங்களும் இரத்து செய்ய வேண்டிய நிர்பந்த்திற்கு சுவிற்சர்லாந்து உள்ளாகும்.இதனால் சுவிற்சர்லாந்து பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். சுவிற்சர்லாந்து பிரஜைகளும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தமது விருப்பத்திற்கு இணங்க வாழும் அல்லது தொழில்பரியும் உரிமையை மறுக்கும் ஆபத்திற்கு உள்ளாகும் நெருக்கடி உருவாகும்.
மேலும் துறைசார் நிபுணர்களின் பற்றாக்குறையினை சுவிற்சர்லாந்து முகங்கொடுக்க வேண்டும். ஆராய்சிக்காக செய்யபட்ட கூட்டு ஒப்பந்தங்கள் (Bilaterale Verträge) இரத்துசெய்யபட்டு இவ் ஆய்வுநடவடிக்கைகளில் ஈடுப்டடுள்ள சிறிய மத்தியதர நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கபடும்.

சுவிற்சர்லாந்து தனது வணிக விடயங்களிற்கான பங்களாராக ஐரோப்பிய அயல் நாடுகளே புவி இயல் யாதார்த்தின்பால் முக்கிய பங்காளிகளாக இருக்க முடியும்.

புலம்பெயர்ந்து வாழும் நாமும் ஐரோப்பாவில் வாழும் எம்மவர்களுடன் பல விடயங்களில் ஓன்றிணைந்தும் சுயாதீனமாக உறவுகளை ஏற்படுத்தி விரும்பிய ஐரோப்பிய நாடுகளில் வாழும் உரிமையையும்தொழில் செய்யும் உரிமைகைள பெற்றுள்ளோம். ஆதலால் வருகின்ற செப்படம்பர் மாதம் 27 ம் திகதி நடைபெற இருக்கும் அபிப்பிராய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு இரத்து செய்யும் உடன்படிக்கைக்கு எதிராக இல்லை என்று வாக்களிப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + fourteen =

*