ஸ்ரீநகர் செக்டார் சிஆர்பிஎஃப் ஐஜி-யாக முதன்முறையாக பெண் ஐ.பி.எஸ். நியமனம்..!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து பாதுகாப்புப்படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் பயங்கரவாதிகளை வேட்டையாட உள்ளூர் போலீசார் உதவியுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மிகவும் ஆபத்தான பகுதியாக சொல்லப்படும் ஸ்ரீநகர் செக்டாரில் சிஆர்பிஎஃப்-யின் ஐ.ஜி. பெண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்முறையாக சிஆர்பிஎஃப் ஐஜி-யாக பொறுப்பேற்றவர் என்ற பெருமையை சாரு சின்ஹா ஐபிஎஸ் பெற்றால். இவர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்தனர்.
இவர் ஏற்கனவே பீகார் செக்டாரில் சிஆர்பிஎஃப் ஐஜி-யாக நியமிக்கப்பட்டு, நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது தலைமையில் ஏராளமான நக்கலைட் தேடுதல் வேட்டை நடைபெற்றுள்ளது. ஜம்மு சிஆர்பிஎஃப் ஐஜி-யாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஸ்ரீநகர் செக்டாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த செக்டார் 2005-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. அப்போது இருந்து தற்போது வரை பெண் ஐஜி நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் சாரு சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.