சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் – சவேந்திர சில்வா!!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை இந்நாட்டுக்கு அழைத்து வருவதன் மூலம் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டு வருவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 59 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளமை சாதாரணமாகக் கருத முடியாது இவற்றில் இன்று காலை 22 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பின்னர் சமூகத்தில் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடை யாளம் காணப்படவில்லை. அந்த நிலைமையை மேலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனைவரும் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும். ஆனால், அது மிகவும் தெளிவான முறைமைக்கு அமையவே முன் னெடுக்க வேண்டும்.
விமானமொன்றில் ஒரு தடவையில் 200 – 300 பயணிகளே அழைத்து வரப்படுகின்றனர்.
இதுபோன்ற விமானங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வைரஸ் பரவுவதற் கான அதிக ஆபத்து காரணமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் எதிர்காலத்தில் சில கட்டுப்பாட்டுக்குள் கீழ் இந்நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருக்கும். ”
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதால் குறித்த எண்ணிக் கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இந்த நிலைமை யைப் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கொரோனா முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக எண்ணி பொது மக்கள் பல இடங்களிலும் பாதுகாப்பின்றி நடமாடுவது கவலைக்குரிய விடயமாகும்.
இது வரையில் சமூகத்தில் கொரோனா பரவவில்லை. நாம் பாரிய அர்ப்பணிப்புக்களினால் இந்த நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
உலகில் கோவிட்-19 கட்டுப்படுத்தலில் வெற்றிகரமான நாடு இலங்கையாகும்.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களில் பெரு மளவானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள தன் காரண மாகவே எமது நாட்டின் பெயர் வெளிவரவில்லை.
ஆரம்பக் காலங்களில் பின்பற்றியதைப் போலவே தற் போதும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் அண்மை நாடான இந்தியாவின் நிலைமை பற்றி சிந்தியுங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு, உலகில் ஒரே நாளில் இந்தியாவில் அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.