புதிய அரசமைப்பு தேவை- விமல்வீரவன்ச!!

புதிய அரசமைப்பு தேவை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கத்தின் பெரும்பான்மையானவர்கள் 19 வது திருத்தத்தினால் உருவான பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டபின்னர் முன்னோக்கி நகரவேண்டும் என கருதுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உருவாக்கப்பட்ட முறுகல்நிலைக்கு இந்த நிர்வாகத்தின் கீழ் தீர்வுகாணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தில் காணப்பட்ட சில விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என 20வது திருத்தத்தின் நகல்வடிவம் தெரிவிக்கின்றது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.