புதிய அரசமைப்பு குறித்து கெஹெலிய தெரிவித்திருப்பது என்ன?

ஆழமாக ஆராய்ந்த பின்னர் அரசாங்கம் புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னைய தலைவர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி புதிய அரசமைப்பினை அரசாங்கம் உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
19 வது திருத்தம் காரணமாக நாடு பல விடயங்களில் முடக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசமைப்பினை உருவாக்கும் போது இது குறித்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய அரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகள் நீண்டகாலம் எடுக்ககூடியவை என தெரிவித்துள்ள அமைச்சர் கடந்த காலங்களில் முன்னையை தலைவர்கள் புதிய அரசமைப்பினை உருவாக்குவதற்கு இரண்டு வருடங்களை எடுத்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.