;
Athirady Tamil News

நாட்டை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அலி சப்ரி!!

0

நாட்டில் போதைப் பொரு ளை முற்றாக இல்லாது ஒழிப்பதற்காக இதன் ஆரம்பத்தை முழுமை யாகக் கண்டறிந்து நாட்டை போதைப்பொருளி லிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 5இலட்சத்து 53ஆயிரம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். அதாவது நாட்டில் 22 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி யுள்ளனர் இந்த நிலையை மிகவும் ஆபத்தானதாகக் கருதி நாட்டில் போதைப் பொருளை முற்றாக இல்லாது ஒழிப்பதற்காக இதன் ஆரம்பத்தை முழுமையாகக் கண்டறிந்து நாட்டை போதைப்பொருளிலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

களுத்துறை வியன் கல்ல என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டில் எமது அரசாங்கம் பதவியிலிருந்து வெளியேறிய போது நாட்டில் போதைப்பொருள் தொடர்பாக 6ஆயிரத்து 600 வழக்குகள் மாத் திரமே பதிவாகியிருந்தன.

இது சமீபத்தில் இரசாயன ஆய்வு திணைக்களத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது 8ஆயிரம் வழக்குகள் போதைப்பொருள் சம்பந்தமாகப் பதிவாயிருந்தமை கண்டறியப்பட்டது.

2017 ஆம் ஆண்டியில் இத்தொகை 11ஆயிரமாக அதிகரித்திருந்தது, 2018 ஆம் ஆண்டளவில் இது 12ஆயிரமாக அதிகரித்துள்ளது, கடந்த வருடத்தில் இத்தொகை 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தில் கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 13ஆயிரம் வழக்குகள் பதிவாயிருந்தன.

இந்த நிலையை மிகவும் ஆபத்தானதாகக் கருதி நாட்டில் போதைப் பொருளை முற்றாக இல்லா ஒழிப்பதற்காக இதன் ஆரம்பத்தை முழு மையாகக் கண்டறிந்து நாட்டை போதைப்பொருளிலிருந்து பாதுகாப் பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 9 =

*