;
Athirady Tamil News

தினசரி கொரோனா பரிசோதனை 11.70 லட்சத்தை தாண்டியது -மத்திய சுகாதாரத்துறை தகவல்..!!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் 10,12,367 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,70,000-க்கும் மேற்பட்ட சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது-

பரவலான பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவு சோதனைகள் செய்வதால், கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறியவும், தடையற்ற தனிமை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கவும் உதவியாக உள்ளது. இறப்பு விகிதம் குறைவதறகும் வழிவகுக்கிறது என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + eighteen =

*