;
Athirady Tamil News

ஒரே நாளில் 83,883 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38.53 லட்சமாக உயர்வு..!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு 38,53,407 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1043 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67376 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,70,492 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 68584 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,15,538 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.75 சதவீதமாகவும், குணமடைதல் 77.09 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,55,09,380 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,72,179 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 7 =

*