;
Athirady Tamil News

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது !!

0

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் வீடொன்றில் 8 அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியில் வீடொன்றில் கடந்த வாரம் பகல்வேளை வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் 8 அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன.

அதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டில் குடியிருந்தவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாசியப்பிட்டியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + seventeen =

*