;
Athirady Tamil News

ராஜபக்ஷக்கள் மாத்திரம்தானா அரசியலை செய்யவேண்டுமா? கேள்வி எழுப்பும் ஹிருணிகா!!

0

இந்நாட்டில் ராஜபக்ஷக்கள் மாத்திரமாக அரசியலைச் செய்யவேண்டும் என கேள்வி எழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது இந்த சந்தர்ப்பத்தில் கொடுமை எனவும் தெரிவித்தார்.

மக்களின் மனம் சிதைவடைந்ததன் காரணமாக மக்கள் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், இன்று கிராமத்திற்கு ஜனாதிபதி சென்றால் கடவுள் வருகிறார் என சொல்லும் நாடு இது என ஹிருணிகா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை காரணமாக ஜனாதிபதி விமானத்தில் நாடு முழுவதும் சென்றமையால் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மக்கள் இத்தகைய மனநிலையில் இருக்கும்போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இப்போது எஞ்சியிருப்பது கொடுப்பதை உட்கொண்டு விட்டு வேறு எதற்காவும் காத்திருப்பதுதான் என அவர் தெரிவித்தார்.

19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம்பற்றதாக இருக்கும் என்றும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக் குப்பின் பசில் ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்றும், அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டில் ராஜபக்ஷக்கள் மாத்திரமாக அரசியலைச் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர் ஒரு சாதாரண அரசியல் வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − three =

*