;
Athirady Tamil News

நிலத்தடி நீரை பாதுகாக்க அங்கயன் நடவடிக்கை !!

0

யாழில் உள்ள கருவேல மரங்களை அழித்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் ராமநாதன் உறுதியளித்துள்ளார் .

யாழ் மற்றும் தீவகப் பகுதிகளில் வளர்ந்துள்ள பயன்பாடற்ற கருவேல மரங்கலே இவ்வாறு அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது .

யாழ் மாவட்ட செயலகத்தில் 3/9/ 2020 வியாழக்கிழமை இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு முன்னாயத்த கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் யாழ்ப்பான பிரதேச செயலாளரினால் முன் மொழியப்பட்டது.

நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த தாவரம் யாழ் மற்றும் தீவகப் பிரதேசங்களில் அதிகம் வளர்ந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் குறித்த தாவரத்தின் வளர்ச்சி அதிகமாக பரம்பலடைந்தால் யாழ்ப்பாணம் பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூட்டத்தின் போது பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

ஆதலால் குறித்த தாவரத்தின் பரம்பலை கட்டுப் படுத்துவதற்கும் குறித்த தாவரம் அதிகம் வளர்ந்துள்ள பிரதேசங்களில் ஏற்படுகின்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்கும் முகமாக யாழ் பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த தாவரத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரமுள்ள ஓர் உப குழு அமைப்பதாக அங்கயன் உறுதி உறுதியளித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + thirteen =

*