;
Athirady Tamil News

வடக்கு செயலாளர்கள் திடீர் இடமாற்றம்!!

0

வடமாகாணத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பலர் அதிரடியாக நேற்றையதினம் (03) இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளராக கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கும் புதிய ஆளுநர் செயலக செயலாளராக தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய திருமதி சரஸ்வதி மோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக தற்போதைய மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதோடு மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக தற்போதைய பேரவைச் செயலக செயலாளரான ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர் பேரவைச் செயலகத்திற்கும் பதில் கடமையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 9 =

*