;
Athirady Tamil News

இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!! சாரதிகள் தப்பினர்!! (படங்கள்)

0

வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள் சேதமடைந்ததுடன்,சாரதிகள் சிறுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா நகரிலிருந்து கோவில்குளம் நோக்கி பயணித்த இரு முச்சக்கர வண்டிகள், கொறவப்பொத்தான வீதியில் சென்று கொண்டிருந்த போது, ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்டநிலையில் குறித்த விபத்துஇடம்பெற்றது.

விபத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடுமையான சேதமடைந்த நிலையில் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்தது அதன் சாரதிகள் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 13 =

*