;
Athirady Tamil News

பொதுஜனபெரமுனவுடான கூட்டணி குறித்து மீள்பரிசீலனை செய்யநேரலாம்- சுதந்திரக்கட்சி!!

0

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடனான கூட்டணி குறித்து சுதந்திரக்கட்சி மீள்பரிசீலனை செய்யலாம் என ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுன தனது பங்காளிக்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் பல தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தைய தேர்தலில் சுதந்திரக்கட்சியின் பல உறுப்பினர்கள் வெற்றிபெற்றனர் அவர்கள் பெரமுனவின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுதந்திரக்கட்சி போதுமான தேசியப்பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படவில்லை என ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

பங்காளிக்கட்சிகளுடன் கலந்தாலோனை செய்யாமல் அரசாங்கத்தின் தேசியபட்டியல் ஆசனங்கள் தீர்மானிக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் நியமனங்கள் வழங்கப்பட்டவேளை பல பங்காளிக்கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் சுதந்திரக்கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை பொதுஜனபெரமுன தொடர்ந்தும் புறக்கணித்தால் கூட்டணியை தொடர்வதா என சிந்திக்கவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + two =

*