20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வது குறித்து ஜேவிபி தீர்மானிக்கவில்லை – ஏன்?

20 வது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற மேல்நீதிமன்ற தீர்ப்புகள் எவ்வாறு அமையும் என்பதை ஜனாதிபதியின் நடவடிக்கைகளே எதிர்காலத்தில் தீர்மானிக்கும் என்பதால் உத்தேச 20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வது பயனளிக்காது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வது குறித்து எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையையும்,1978 அரசமைப்பினையும் எதிர்த்தவர்கள் தற்போது அதனை பாதுகாக்க முயல்கின்றனர் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை வலுப்படுவத்துவதற்கான யோசனைகளை முன்வைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.