;
Athirady Tamil News

கொழும்பு போர்ட்சிட்டி நிறுவனத்தின் மீது அமெரிக்க தூதரகம் கடும் குற்றச்சாட்டு!!

0

கொழும்பில் துறைமுகநகரை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிசிசிசி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணுவது குறித்து நாடுகள் அவதானமாகயிருக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது-

ஆகஸ்ட் 26ம் திகதி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தென்சீனா கடற்பரப்பில் கட்டுமானப்பணிகள் மற்றும் இராணுவமயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகளுக்கு எதிராகவும், கடலோர வளங்களை பயன்படுத்துவதற்கான உரிமையை கோரிய தென்கிழக்காசிய நாடுகளுக்கு எதிராக பலவந்தத்தை பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் விசா தடையை விதித்துள்ளது.

இந்த தனிநபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் .
அவர்களினது குடும்ப உறுப்பினர்களும் விசா கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும் அமெரிக்காவி;ன் வர்த்தக திணைக்களம் சீன அரசாங்கத்தின் 24 நிறுவனங்களை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது.சீனா கொமினிகேசன் கொன்ஸ்டிரக்சன் நிறுவனத்தின் பல துணை நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த தடைகளின் அடிப்படையில் அமெரிக்காவில் உற்பத்தியாகும் பொருட்கள் சிலவற்றைபட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட அனுமதிப்பத்திரம் அவசியம் .
2013 முதல் சீனா தனது அரசநிறுவனங்களை பயன்படுத்தி தென்சீன கடலில்3000 ஏக்கர் பகுதியை அகழ்வது மற்றும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது .
இதன் மூலம் அந்த பகுதியை ஸ்திரதன்மை இழக்கசெய்துள்ளதுடன் அயல்நாடுகளின் இறைமையை காலில் போட்டு மிதித்துள்ளதுடன் சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்சீனா கடல்பகுதியில் அகழும் பணிகளுக்கு சிசிசிசி தலைமை தாங்கியுள்ளது மேலும் சீனா தனது புதிய பட்டுப்பாதை திட்டத்துக்கு பயன்படுத்தும் முக்கிய நிறுவனமாகவும் இது காணப்படுகின்றது.

சிசிசிசியும் அதன் துணை நிறுவனங்களும் சர்வதேச அளவில் ஊழல்- நியாயமற்ற நிதி வழங்கும் நடவடிக்கைகள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல் மற்றும் பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளன.
இந்த தடைகள் சீன நிறுவனங்களை இலக்குவைக்கப்பட்டவை.
சிசிசிசி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் ஈடுபடும்போது ஆபத்தை சரிவரக்கையாளுமாறு அமெரிக்கா கேட்டுக்கொள்கின்றது.
சிசிசிசி மிகமோசமான சூழல்பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச அளவில் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது, இந்தோ பசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது.
சி சிசிசியின் துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தங்களின் இறைமை நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அனைத்து நாடுகளும் அந்த நிறுவனத்துடனான உறவுகளை மீள்பரிசீலனைசெய்யவேண்டும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 6 =

*