ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் கொடுங்கோன்மையில்லை -ஹர்சா டிசில்வா!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் மீற முடியாது அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
19வது திருத்தம் நீக்கப்பட்டு 20வது திருத்தத்தைநிறைவேற்றும் முயற்சிகள் காரணமாக அதிகாரம் துருவமயப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் கொடுங்கோன்மையில்லை என தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக மனுதாக்கல் செய்வதற்கான அடிப்படை உரிமை ,அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டமை போன்றன 19வது திருத்தத்தில் காணப்பட்டசிறந்த விடயங்கள் என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களின் உரிமைகளை மீறும் விதத்தில் நாட்டின் தலைவர் செயற்பட்டால் அதற்கு எதிராக சட்டமா அதிபர் மனுத்தாக்கல் செய்யகூடிய நிலை 19வதுதிருத்தத்தின் மூலம் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி விரும்பினால் அவரால் 150 அமைச்சர்களை நியமிக்கமுடியும் என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.